இடுப்பை சுற்றி சதை வளருகிறதா? இதை சாப்பிடுங்கள்

By Balakarthik Balasubramaniyan
19 Jul 2023

இடுப்பை சுற்றி இருக்கும் சதை

உடல் எடையை விட இடுப்பை சுற்றி இருக்கும் சதை என்பது பெரும் தொந்தரவு. இதை குறைப்பது எப்படி?

கொழுப்புகள் வளர்வது இயல்பு

உடல் பருமனால் ஆங்காங்கே கொழுப்புகள் வளர்வது இயல்பு. உடற்பயிற்சி உடன் இந்த உணவையும் சாப்பிடுவது கூடுதல் சிறப்பு.

அவகேடோ

அவகேடோ பழத்தில் கெட்ட கொழுப்பை எரிக்கும் ஆற்றல் அதிகம். கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்பு அமிலங்கள் தான் இருக்கின்றன. அவை உடல் எடையை குறைக்க பேருதவியாக இருக்கும்.

இலவங்கப்பட்டை

இலங்கப்பட்டை பாரம்பரிய உணவாகும். குளுக்கோஸை உயிரணுக்களுக்கு வேகமாக நகர்த்த உதவுகிறது, இன்சுலின் உற்பத்தியை சீராக்கும்.

காபி

பெரும்பாலான ஆய்வுகள் காபியில் பல நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கிறது. காபி அட்ரினலின் சுரப்பியைத் தூண்டுகிறது. இது உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

மிளகாய்

மிளகாய் கேப்சைசின் எனப்படும் வேதிப்பொருளை கொண்டது. இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. அதோடு ஆங்காங்கே தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கிறது.