எடையை குறைக்க காலையில் இதை சாப்பிடுங்கள்!

By Balakarthik Balasubramaniyan
20 Jul 2023

உணவு மிக முக்கியம்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியது உணவில் தான். அதற்கான காலை உணவை பார்க்கலாம்.

குறைந்த கலோரிகள்

குறைந்த கலோரிகள் அதிக நார்ச்சத்துக்கள் அதிக ஊட்டச்சத்துக்குள் உங்கள் உணவில் உள்ளதா என்பதை உறுதிப் படுத்துங்கள்.

முட்டை சாப்பிடலாம்

முட்டையில் உயர் புரதங்களும் வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கின்றன. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை தரும்.

காலையில் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக நார்ச்சத்துக்களும் குறைந்த கலோரியும் நிறைந்திருக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.

யோகர்ட்

யோகர்ட் ப்ரோ-பயோடிக் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளது. இது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும்.

ஸ்மூத்திகள்

ஸ்மூத்தியில் உடலுக்கு எனர்ஜி தரும் எல்லாவித ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும். உடல் எடை குறையும் மூலங்கள் நிரம்பியுள்ளது.

எடை குறைய பெர்ரி

பெர்ரி வகைகளான ஸ்டிராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் பிளாக் பெர்ரிஸ் ஆகியவற்றை சாப்பிடுவது கூடுதல் சிறப்பு.