Chia Seeds Benefits: குட்டி விதையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!

  • SHARE
  • FOLLOW
Chia Seeds Benefits: குட்டி விதையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!

Chia Seeds Benefits: சியா விதைகள் என்ற உடன் அது என்ன என்ற கேள்வி பலருக்கும் வரலாம். சியா விதைகளை காணாமல் நாம் கோடைக் காலத்தை கடக்க முடியாது. சாதாரண சாலையோர கடைகளில் குடிக்கும் ஜூஸ்களிலும் இந்த விதைகள் கலந்துக் கொடுக்கப்படும். காரணம் சியா விதைகளில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. இதை உண்பதால் பல உடல்நலப் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சியா விதைகள் என்றால் என்ன?

சியா விதைகள் என்பது சால்வியா ஹஸ்பனிக்கா என்ற தாவரத்தின் விதைகள் ஆகும். மிகச் சிறிய அளவுள்ள இந்த விதைகளில் ஆற்றல்கள் நிரம்பி இருக்கின்றன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையையும் குறைக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் இதை சாப்பிடும் சில வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம்.

இதையும் படிங்க: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?

சப்ஜா விதைகள், சியா விதைகள் வித்தியாசம்

சப்ஜா விதைகளும் சியா விதை போன்றே தோற்றம் அளிக்கும். இரண்டையும் தண்ணீரில் போட்டால் சப்ஜா விதைகள் உடனடியாக தண்ணீரை உறிஞ்சி பெரிசாகும். ஆனால் சியா விதைகள் அவற்றின் எடையை சுமார் 10 மடங்கு தண்ணீரில் உறிஞ்சி ஒரு பேஸ்ட்டை உருவாக்குகின்றன. சியா விதைகளை பச்சையாக உண்ணலாம். ஆனால், சப்ஜா விதைகளில் அப்படி இல்லை. சப்ஜா விதைகள் குளிர்ச்சியைத் தருகிறது. நச்சு நீக்கி போல் செயல்படுகிறது. ஆனால் சியா விதைகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது.

சியா விதை சத்துக்கள்

சியாவில் FPO உள்ளது. அதாவது, F என்பது நார்ச்சத்து, P என்பது புரதம், O என்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். இந்த சிறிய விதைகள் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இவற்றை சாப்பிட்டால் உடல் எடை குறையும். இதில் உள்ள நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இவற்றை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. மலச்சிக்கலில் இருந்து ஓய்வெடுக்கிறது.

நோய் எதிர்ப்பு பண்புகள்

சியா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம். குளோரோஜெனிக் அமிலம், காஃபிக் அமிலம், மைரிசெடின், குர்செடின், கேம்ப்ஃபெரால் போன்ற நல்ல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

எடையும் குறையும் தொப்பையும் குறையும்

சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும். இவற்றை உட்கொண்டால் உடல் எடை குறையும். ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி, 28 கிராம் இந்த விதைகள் 10 கிராம் நார்ச்சத்து அளிக்கிறது. அதாவது ஒவ்வொரு நாளும் 3-4 தேக்கரண்டி சியா விதைகளை உட்கொள்ள வேண்டும். இது நார்ச்சத்து வழங்குகிறது. நார்ச்சத்து ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எடை குறைவதோடு தொப்பை மற்றும் தொடை கொழுப்பும் குறைகிறது. சியா விதைகள் ஒட்டுமொத்த எடையைக் குறைக்கின்றன.

சியா விதைகளை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது?

பலர் சியா விதைகளை ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். ஏனெனில் தாவர விதைகளில் பைடிக் அமிலம் என்ற இயற்கைப் பொருள் உள்ளது. இவற்றை உட்கொள்வதால் இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் உறிஞ்சுவதில் தாது குறைபாடுகள் ஏற்படும்.விதைகளை ஊறவைப்பதால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

இதையும் படிங்க: Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

சியா விதைகளை எப்படி சாப்பிடலாம்?

2 டேபிள் ஸ்பூன் சியா விதைகளை ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுங்கள். சாலட்கள், பழ கஸ்டர்டுகள், புட்டு, பான்கேக் மற்றும் ஓட்ஸ்-ல் இணைத்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: சியா விதை நன்மை பயக்கும் என்றாலும் உங்கள் உடலின் தன்மையை பொறுத்தே அது செயல்படும். வேறு ஏதேனும் பிரச்சனை உங்களுக்கு இருந்தால் சியா விதையை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்ல முடிவு.

அடுத்ததை படிக்கவும்

Benefits of Black Tomato: கருப்பு தக்காளியில் கொட்டி கிடக்கும் நன்மைகள்

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்