Back Pain Relief: முதுகு வலி வரக் காரணமும், தீர்வும்.. சிம்பிள் டிப்ஸ்

  • SHARE
  • FOLLOW
Back Pain Relief: முதுகு வலி வரக் காரணமும், தீர்வும்.. சிம்பிள் டிப்ஸ்

Back Pain Relief: உடல் வலிகளில் முதுகு வலி என்பது ஒரு வேதனையான பிரச்சனை. முதுகு வலியிந் தாக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முதுகு வலி வரப் பல்வேறு காரணங்கள் உண்டு. தீவிரமான உடல் செயல்பாடு, உட்கார்ந்த இடத்தில் வேலை, அதிக எடைத் தூக்குதல் என பல காரணம் உள்ளது. சிலருக்கு சிறிய செயல்கள் கூட திடீரென முதுகு வலியை ஏற்படுத்தும். உடல் பாகத்தில் முதுகெலும்பு எண்பது முக்கிமயான ஒன்று.

முதுகுவலி வேதனை

முதுகு வலி வந்தால் ஒரு சிறிய பொருளைக் கூட குணிந்து எடுக்க முடியாது, உட்கார முடியாது, நிம்மதியாக படுக்க முடியாது. முதுகு வலி வருபவர்கள் பெரும்பாலும் சொல்வது முதுகு எலும்புகளில் யாரோ ஸ்க்ரூ டிரைவரால் குத்துவது போல் உள்ளது. முதுகில் ஏதோ கட்டிவிட்டது போல் பாரமாக இருக்கிறது என்பதாகும்.

இதையும் படிங்க: control blood pressure levels: உங்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த இதை குடியுங்கள்!

முதுகுவலி பிரச்சனைகளுக்கான தீர்வுகள்

முதுகுவலி பிரச்சனைகளுக்கு சில தீர்வகள் இருக்கிறது. சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்தால் முதுகுவலி அசௌகரியத்தை முடிந்தவரை குறைக்கலாம். மேலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதன் மூலம் இது நீண்டகால பிரச்சனையாக மாறாமல் தடுக்கலாம். குறைந்தபட்சம் அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.

அதிக ஓய்வுக் கூடாது

சில காலமாக முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் அதிக ஓய்வெடுப்பதால் முதுகுவலி அதிகரிப்பதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. அவர்கள் அன்றாட வேலைக்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. எனவே, மூன்று நாட்களுக்கு மேல் பெட் ரெஸ்ட் எடுக்கக் கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முடிந்தவரை உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சித்தால் பிரச்னையின் தீவிரம் குறையும் என்கிறார்கள்.

அதிகப் பழுதூக்குதல்

ஜிம்மில் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொள்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம். முறையான உடற்பயிற்சி அவசியம் என்றாலும் அதில் கவனம் தேவை. அதிகப் பழுதூக்குதலும் முதுக வலிக்கு காரணமாக அமையலாம். முதுகு வலி ஆரம்பித்தால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. மன அழுத்தம் வரும். கவனமான உடற்பயிற்சி முக்கியம்.

பிரச்சனையின் தீவிரத்தை புரிவது அவசியம்

சிக்கலைக் குறைக்க நீங்கள் முதலில் ஒரு நிபுணரை அணுக வேண்டும். அவர்கள் உங்கள் பிரச்சனையின் தீவிரத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப பரிந்துரைப்பார்கள். கீழ் முதுகு வலியைக் குறைக்க மாத்திரை எதுவும் இல்லை. வலுப்படுத்தும் பயிற்சிகள் தான் உதவியாக இருக்கும். நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

முக்கிய தசைகளை வலுப்படுத்துதல்

பலர் வயிற்று தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் முதுகுவலியிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். வயிற்று தசைகள் பலவீனமாக இருக்கும்போது, ​​மற்ற பகுதிகளில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே, தசைகளை வலுப்படுத்துவது முக்கியம்.

தொப்பை இருந்தாலும் முதுகுவலி வரும்

தொப்பை அதிகமாக இருந்தாலும் முதுகுப் பகுதி வளைந்த நிலையிலேயே இருக்கும். இதனால் கூட முதுகு வலி வரலாம். எனவே வயிற்றுப் பகுதி தசையையும், தொப்பையையும் குறைப்பது அவசியம்.

பிரேஸ்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்

பலர் முதுகுவலியைப் போக்க பிரேஸ்களைப் பயன்படுத்த ஆரம்பித்து, பழகிவிடுகிறார்கள். பிரேஸ்கள் அதிக எடை தூக்குதல் மற்றும் அதிக மன அழுத்தத்தை உள்ளடக்கிய செயல்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும். இவற்றை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. நாள் முழுவதும் அவற்றைப் பயன்படுத்துவதால், நிலைத்தன்மையை வழங்கும் தசைகள் பலவீனமடைகின்றன.

படுக்கையறை பராமரிப்பு

ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விதமான தலையணை மற்றும் படுக்கையை பயன்படுத்துவதும் சிக்கல் தரும். நிலையான மற்றும் நிம்மதியான படுக்கை முக்கியம். படுக்கும் முறையும் அவசியம். தூங்கும் போது உங்கள் நிலையும் சரியாக இருக்க வேண்டும். உங்கள் நிலை சரியில்லாதபோது பிரச்சனை மோசமாகி, நீங்கள் உறங்கும் மெத்தை முதுகுவலியை ஏற்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 ஆயுர்வேத குறிப்புகள்

முதுகு வலியை சில பிரச்சனைகள் மூலம் சரி செய்யலாம் என்றாலும் தீவிர வலியையோ அல்லது ஆரம்பத்தில் இதை உணரும் போதும் மருத்துவரை அணுகுவது சிறந்த முடிவு.

image source: freepic

அடுத்ததை படிக்கவும்

Benefits of Black Tomato: கருப்பு தக்காளியில் கொட்டி கிடக்கும் நன்மைகள்

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்