கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன?

  • SHARE
  • FOLLOW
கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறிகள் என்ன?

உங்கள் கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் உணரக்கூடிய அறிகுறிகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

இரத்தபோக்கை தவிர, மாதவிடாய் மற்றும் கர்ப்பத்தின் முதல் வார அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். சில சமயங்களில் தாங்கள் கர்ப்பமாக இருப்பது கூடப் பெண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் தசைகளில் வலியை உணர முடியும்.கர்ப்பத்தின் முதல் வாரத்தில் தீவிரமான அல்லது தொல்லை தரும் அறிகுறிகளைக் காண்பதறிது. கர்ப்பத்தின் முதல் வாரத்தில் காணப்படும் அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதைப் பற்றிய சிறந்த தகவலுக்காக, லக்னோவில் உள்ள ஜல்கரிபாய் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் தீபா ஷர்மா அவர்களிடம் பேசினோம்.

சோர்வு

கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில், நீங்கள் அதிக சோர்வை உணரலாம். சில பெண்களுக்குப் பாதங்களில் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளும் தென்படலாம். உடலில் சோர்வு அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உணரப்பட்டால், வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்யலாம். முடிவுகள் நேர்மறையாக இருப்பின், மருத்துவரை அணுகவும்.சோர்வைப் போக்க யோகா, உடற்பயிற்சி, சிறுதூக்கம் போன்ற விஷயங்களைச் செய்யலாம்.

முதுகு வலி

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக, உடலின் பல பாகங்களில் வலியை உணர முடியும். கர்ப்பத்தின் முதல் வாரத்தில் முதுகு மற்றும் வயிற்று வலிகளை உணரலாம். இருப்பினும், இது மாதவிடாய் அல்லது வேறு பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.கர்ப்பம் அல்லது மாதவிடாய் இல்லாத நிலையிலும், உங்களுக்கு வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் முதுகுவலியை தவிர, முழங்கால்களுக்கு மேல் அல்லது பின்புறத்திலும் வலியை உணரலாம்.

வாய் கசப்பு

கர்ப்பத்தின் முதல் வாரத்தில் வாய் கசப்பை உணரலாம்.இந்த நிலையில், ​​ஒருவருக்கு காரமான உணவுகளைச் சாப்பிடுவதில் விருப்பம் இருக்கலாம். வாய் கசப்பை குணப்படுத்த மூலிகை டீ குடிக்கலாம். குளிர் காலங்களில் துளசி டீ அல்லது கருப்பு மிளகு மற்றும் கிராம்பு டீ குடிப்பது நன்மை தரும். இதைத் தவிர, கர்ப்பத்தின் முதல் வாரத்தில் மனநிலை மாற்றங்களையும் உணரலாம்.

தலைவலி

கர்ப்பத்தின் முதல் வாரத்தில் தலைவலி ஏற்படலாம்.ஒற்றைத் தலைவலி பிரச்சனையுள்ள பெண்களுக்கு, தலைவலி அதிக சிரமத்தைக் கொடுக்கலாம்.கர்ப்ப காலத்தில் தலைவலி ஏற்பட்டால் யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது, வலியைக் குறைக்க உதவும். தலைவலி அல்லது மற்ற தொந்தரவுகளுக்காக, எந்த மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்ள கூடாது.

வயிற்றுப் பிடிப்புகள்

கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றிப் பேசுகையில், மருத்துவரின் கூற்றுப்படி, ஒரு சில பெண்கள் வயிற்று தசை பிடிப்புகளையும் உணர்கிறார்கள். அதே நேரத்தில், ஒரு சில பெண்களுக்குச் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும் எழுகின்றன. வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளும் கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் காணப்படலாம்.

கர்ப்ப காலத்தில் மேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் கண்டால், வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்யலாம். இதனுடன் மருத்துவரை அணுக வேண்டியதும் அவசியம்.

images source: freepik

அடுத்ததை படிக்கவும்

Benefits of Black Tomato: கருப்பு தக்காளியில் கொட்டி கிடக்கும் நன்மைகள்

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்