Reduce Chest Fat: மார்பு கொழுப்பை குறைப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Reduce Chest Fat: மார்பு கொழுப்பை குறைப்பது எப்படி?

Reduce Chest Fat: மார்பகங்களில் சதை சேருவது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கும். ஒரு நல்ல டீ-சர்ட் வாங்கி அணிந்துக் கொள்ள முடியாது, கண்ணாடியில் உங்கள் உடலை பார்த்தாலே மன உளைச்சல் ஏற்படும். உடலின் கட்டமைப்பை அழகாக காண்பிக்க மார்பக பகுதி என்பது மிக முக்கியம். குறிப்பாக ஆணின் மார்பகங்கள். ஆண்களின் மார்பகங்களில் ஹார்மோன் மாற்றங்களால் மார்பக திசுக்களின் விரிவாக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக பருவமடையும் போது இது ஏற்படுகிறது. மறுபுறம் உடலின் கொழுப்புகள் அதிகம் சேருவதாலும் மார்பக பகுதியில் சதை சேர்ந்து தொங்கும்படியாக காட்சியளிக்கும்.

மார்பு கொழுப்பை குறைப்பது எப்படி?

உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சேரும் கொழுப்பை மட்டும் கரைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. வெறும் உணவு கட்டுப்பாடுகளால் மட்டும் இதை செய்ய முடியாது. தனிப்பட்ட உடற்பயிற்சிகள் செய்வது என்பது மிக முக்கியம். பொதுவாக மேற்கொள்ளும் கார்டியோ, ஜாக்கிங், நடைபயிற்சி, சைக்கிளிங் ஆகியவை உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் கொழுப்புகள் சேர விடாமல் தடுக்கிறது.

இதையும் படிங்க: தினமும் உடற்பயிற்சி செய்வது சலிப்பாக இருக்கிறது? ஜாலியாக உடற்பயிற்சி செய்வது எப்படி?

மார்பக கொழுப்பை அகற்ற உணவுமுறை

வொர்க்கவுட் உடன் கூடிய உணவுத் திட்டம் என்பதும் மிக முக்கியம். மார்பக பகுதியில் கொழுப்பை சேர விடாமல் தடுக்க இது சிறந்த வழியாகும். ஒரு பவுண்ட் கொழுப்பு என்பது சுமார் 3500 கலோரிகளுக்கு சமம். ஒரு பவுண்ட் உடல் கொழுப்பை கரைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. உங்கள் உணவில் கலோரிகள் குறைவாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மார்பக தசைகளை குறைக்கும் பயிற்சிகள்

வழங்கப்பட்டுள்ள உடற்பயிற்சியை நீங்கள் வீட்டில் இருந்தும் செய்யலாம் அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றும் செய்யலாம். வீட்டில் இருந்தே செய்ய முற்படும் பட்சத்தில் ஜிம் பணியாளர்கள் அல்லது தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து ஆலோசனை கேட்பது நல்லது.

குறிப்பிட்ட பகுதியில் உடல் எடையை குறைக்க முற்படுவதற்கு எடை தொடர்பான இயந்திரங்கள் மிக முக்கியம். ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். படிப்படியாக உடற்பயிற்சியை மேம்படுத்துவதே நல்லது. குறுகிய காலத்தில் செய்துவிட்டு அதை மீண்டும் தொடங்குவது என்பதும் சிக்கல் தரும். தொடர்ச்சியாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கார்டியோ

கார்டியோ என்பது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும், நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகளை நீண்டகாலம் உடலில் தக்கவைக்கும். கார்டியோ செய்வதன் மூலம் நீங்கள் ஆழமாக சுவாசிக்கத் தொடங்குவீர்கள். இது உங்கள் சுவாச அமைப்பை மேம்படுத்தும். உங்கள் தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்க உங்கள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும்.

தொடர்ந்து கார்டியோ செய்வது சலிப்பாக இருந்தால் ரன்னிங், வாக்கிங், நீச்சல் செய்யுங்கள். இது உங்கள் முழு உடலுக்கும் நன்மை பயக்கும்.

புஷ்-அப்ஸ்

புஷ்-அப்ஸ் என்பது உடலை கட்டுக்கோப்பாக வைக்க மிக சிறந்த வழியாகும். குறிப்பாக மார்பக பகுதி கொழுப்புகளை கரைக்க சிறந்த வகையில் உதவும். மார்பகத்தின் தசைகளை கரைத்து இருக்கமாக்குவதோடு உடலின் மேற்புற பகுதியை இருக்கமாக காட்ட உதவுகிறது.

பேரலல்-பார்

பூங்கா, மைதானம் என பல இடங்களில் இந்த வகை கம்பிகளை பார்த்திருப்போம். இடைவெளி விட்டு இரண்டு கம்பிகள் பொறுத்தப்பட்டிருக்கும். இரண்டுக்கம் நடுவில் உடலை வைத்து. மார்பளவு உயரத்தில் இருக்கும் அந்த கம்பிகளை இரு கைகளால் பிடித்து உடலை மேலும் கீழும் தூக்கி இறக்குவது ஆகும். இது உடலுக்கும் மார்பகத்தின் மேற்புறப் பகுதிக்கும் மிக நல்லது.

டம்பெல் புல்-ஓவர்

உங்கள் முழங்கால் அளவுள்ள பலகையில் உங்கள் மார்பு பகுதியை மட்டும் வைத்து டம்பெல் எடுத்து இருகைகளால் பிடித்து மார்பு பகுதி வரைக்கும் பின்புறத்தில் கையை நீட்டியும் இறக்கி ஏற்றவும்.

இதையும் படிங்க: கர்பகால உடற்பயிற்சியின் நன்மைகள்; கர்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா?

பெஞ்ச் பிரஸ்

இது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். பெஞ்ச்சில் படுத்து பார்பெல் எடுத்து நெஞ்சு பகுதியை நோக்கி வைத்து மேலும் கீழும் தூக்கி இறக்கவும். இது உங்கள் உடலுக்கும் மார்பக பகுதிக்கும் பல வகையில் நன்மை பயக்கும். மார்புக்கு மேலே தூக்கி இறக்கும் போது மார்பகத்தின் தசையை குறைக்க உதவும்.

இதுபோன்ற பல உடற்பயிற்சிகள் உங்கள் மார்பக பகுதி தசைகளை குறைக்க உதவும். உங்கள் கூடுதலாக ஏதேனும் வலி அல்லது அசௌகரியம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

அடுத்ததை படிக்கவும்

Benefits of Black Tomato: கருப்பு தக்காளியில் கொட்டி கிடக்கும் நன்மைகள்

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்